Saturday, March 21, 2009

கலைஞன் - குமிழ்

கலைஞனுக்கான பூர்த்தி - சர்வமும் தனக்குள் கொண்டுள்ளதா?
கலைஞன் அந்நியப்படுதல் முலமே கலையை சேர்கிறான். கலைஞனின் ஒதுங்கியிருப்பே கலையை மீட்டெடுக்கிறது. சமுதாயத்திற்காக, மக்களுக்காக படைக்கப்படும் கலைகள் என்றுமே காலவோட்டத்தை கடந்து செல்லும் திராநியற்றதாகவே உள்ளது. ஓர் ஜுவாலை, உயிர் அழுத்தம் கூடிய கலைஞன் தன்னை அழித்து - ஒதுக்கி படைக்கும் கலை காலமற்று ஜீவிக்கிறது (immortalized).
அந்நியபடுதலின் இன்பத்தை கலைஞன் நுகரும்போதே அவன் உருபெறுகிறான் அந்நியபடுதலின் எல்லையையும் அவனே நிர்ணயிக்கிறான்.
நிரந்தரமற்ற அந்த அந்நியபடுதலின் இன்பம் கலைஞனின் சந்தோசத்தில் ஓர் துளியை மட்டுமே நிரப்புகிறது. கலைஞனின் மனம் அதுளிகளை கொண்டு சமுத்திரம் காணவே தவமிருக்கிறது.
எந்த கலைஞனும் இம்முயற்சியை கைவிடுவதும் இல்லை வெற்றி காண்பதும் இல்லை, பிறகும் இந்த மாத்தவம் தொடரவே செய்கிறது.

Monday, March 2, 2009

ஒரு இலை உதிர்ந்தது

துக்கமான நாட்கள் வலிய வந்து என் நாட்காட்டியை நிரப்புகிறது. என் பாத்திரம் உணர்ந்து கொள்ள முடியாத அளவில் காட்சிகள் நகர்ந்துகொண்டிருகின்றன, நிதர்சனமாய் உணர்வுகளுக்கு ஆட்படாத வார்த்தைகளால் வசனங்கள் கோர்த்து பரிச்சயமற்ற நடிகனாய் என் வெளியில் நான் காட்சிபடுகிறேன். என்னை அறிந்தவர்களுக்கு கூறிக்கொள்ள மட்டும் வார்த்தைகள் வெளிப்படுகின்றன மிக்க பிரயத்தனமின்றி. மனது அதன் போக்கில் நடை போடுகிறது, வால் நட்சத்திரங்கள் பாதையில் கண்டங்கள் அழிந்துபோவது போல், மனவெளியில் அதீத விசையுடனே துன்பமும் பிரயாணப்படுகிறது.