Thursday, August 4, 2011

சொல்லுவதை விட செய்து விடலாம்.. சொல்லுவதை செய்துவிடலாம்.. சொல்லும் சொல் செய்யக் கூடியதாய் இல்லாமலும் போகலாம்... சொல்லுக்கும் செயலுக்கும் இடைவேளை இருக்க கூடாது.. வாய்மை எனப்படுவது அதுதான்.. நியாயவான்கள் அப்படி இருந்து கொள்ளலாம், அன்றாடங்களுக்கு கொஞ்சம் அசௌகரியம்தான் .

சொல்லுவதை நிருத்தலாமென்றால், பேசவே ஒன்றுமில்லாமல் போய் விடும். மற்றவர்களுக்கு கோபம் வரலாம், சொந்தங்கள் வருந்தலாம், அசட்டை செய்து பிரிந்தும் போய் விடலாம். உதவிக்கு வராதவர்களின் எண்ணங்களுக்கு மரியாதை தர மனம் இல்லை. பேச வேண்டும் என்பதர்க்காகவேனும் இன்னும் சொல்லலாம், செய்ய கூடியதாய் எதுவும் கிடைக்காமலா போய்விடும்?

செய்து முடித்துவிட்டால் சிலகாகித்துக்கொல்லலாம், செருக்கேறி போய் மயிர் வளர்துக்கொல்ள்ளலாம். மற்றவர்கள் கேட்க பீத்திக்கொள்ளலாம். எத்தனை நாளைக்கு? மறுபடியும் சொல்ல கேட்பார்கள்.. மௌன விரதிகள் ஊர் ஒன்று உள்ளதாம், போய் சேர வேண்டும்.

எழுத்து நம்பிக்கை தரும், சொல் சோர்வை தருகிறது.. பாரதி பாடி வைத்தான், பாட்டு உற்சாகம்.. பாடகன் உர்ச்சவன்.. சிவன் ஆடினான், பாடல் இருந்ததா தெரியவில்லை.. சிந்தனை போல் ஒன்றுமில்லை.. சொல்லும் எழுத்தும் இல்லாமல் போகிலும் சிந்தனை வரும். சிந்தனை போல் செயல் என்றால் சொல்லிக்கொள்ள தேவை இல்லை. சொல்ல கேட்டாலும் சொல்லலாம்: சித்தம் போக்கு சிவன் போக்கு என்று!

Monday, August 1, 2011

its most common..

நேற்றை போல் இன்றில்லை.. Indians will terribly lose today against England
அது இல்லை என் கவலை.. ஒரு வேலை அது கூட ஒரு காரனமாய் இருக்கலாம்..
உருபிடாத ஒரு படம் பார்த்தேன் நேற்று (Cowboys and aliens).. "அட ராமா ஏன் என்ன இந்த மாதிரி படமெல்லாம் பாக்கவைகுற?!"

ஒரு பக்கம் ஹாலிவுட் படங்கள் காபி அடிக்கபடுகிரதென்றால் இந்த படம் 90' ல் வந்த தமிழ் படத்தின் remake போல் இருந்தது

உங்களக்கு தோணலாம் அப்படியென்றால் நேற்று தான் மோசமான நாளாக இருந்திருக்கவேண்டுமென்று.. உண்மையை சொல்லவேண்டுமென்றால், அப்படித்தான்.. அஜீரனகோலாறு சாப்பிட்ட அன்றே வருவதில்லை அடுத்த நாள் தான் வருகிறதல்லவா அது போல தான்

இதுவுமே ஒரு காரணம் தான்.. மெய்யாக எனக்கும் தெரியவில்லை.. நேற்றை போல் இன்றில்லை.. அவ்வளவு தான் உணரமுடிகிறது

மேலும் குழப்பாமல் இந்த பதிவை முடிக்கிறேன்.. எனக்கான Calsberg குளிர் ஆறுவதற்குள் முன்பு..

குளிர் கூட "ஆரத்தான்" செய்யும்மா

Wednesday, December 15, 2010

உலகில் எது மிகவும் சுவாரஸ்யமானது?
பொய் உரைக்கும் குழந்தையின் முகபாவம்!
பொய் சொல்ல எப்போது கற்றுகொள்கிறோம்? முதல் பொய் என்னவென்று யாருக்காவது ஞாபகம் இருக்குமா?
சுவாரஸ்யமான பொய்களில் ஒன்று - பொய்யாக கோபப்படுவது.. அதுவும் காதலியின் பொய் கோபம் தனித்துவமானது.. அந்த கோபத்தினை உண்மை போல பாவித்து பாருங்கள், அதன் இன்பமே அலாதி! பொய் கோபத்தை துறக்கும் நளினம் அது பெண்களுக்கு மட்டுமே வாய்க்கும். எதிர் தரப்புக்கு தெரியாத படி நூலிழையில் கோபம் கறைந்து பேச ஆரம்பிப்பார்கள், உங்களுக்கு சாத்தியமா என்று தெரியவில்லை நான் முயற்சித்து தோற்றதுதான் மிச்சம்!

எப்படி கண்டுகொள்ள என்று கேட்பவர்களுக்கு...
1. காதலியின் பொய் கோபம் நீங்கள் எதிபாராத நிமிடத்தில் ஏற்படும்
2. வழக்கமான சுபாவங்களில் இருந்து பொய் கோபப்படுகையில் வேறுபட்டு காணப்படுவர்
எடு-அதிகமாக பேசும் காதலி பேசுவதையே தவிர்க்கலாம், பார்க்க வருவதை விரும்பும் ஒருவர் வெளி வருவதை நிறுத்தி கொள்ளலாம்
3. எப்பொழுதை காட்டிலும் சமாதானத்திற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளுதல்

என்ன செய்வதென்று அறியாத பேதை ஆண்களுக்கு...
1. முடிந்த வரை சமாதானப்படுதுங்கள்
2. கோபத்தை கட்டுபடுத்த சினிமாவில் சொல்வது போல் 1 முதல் 10 வரை எண்ணுங்கள்
3. முடிந்த வரை கோபத்தினை ரசிப்பதாக நடியுங்கள்
4. கவிதை தெரிந்தால் ஒன்றிரண்டை எடுத்து விடலாம், இல்லை எனில் தொட்டு பேசுங்கள்
5. பெயர் சொல்லி மட்டுமே அழையுங்கள் - செல்ல பெயர்களை தவிர்த்திடுங்கள்

திரும்பவும் சொல்லிகொள்கிறேன், உங்கள் மழலையில் சொன்ன பொய்களை மற்றவர்கள் ரசித்திருக்கலாம். உங்கள் மழலை பொய்களை பிரதிபலிக்கும் காதலியின் செல்ல கோபங்களை ரசிக்க மறக்காதீர்கள்!


Saturday, November 20, 2010

முள் தைத்த செருப்பு

திரும்பிப் பார்கிறேன், எங்கு விட்டு சென்றேனென்று..

கவிதையோ கதையோ பாதித்துவிட முடியாத ஒரு மரத்த மனநிலையில் விட்டொழிந்திருக்கலாம் வலை பதிதலை.

ஒரு நாளுக்கு இத்தனை வினாடிகள் ஏன்? ஒன்றை நகர்த்துவதற்குள் மற்றொன்று, மாய்த்து விடுகிறது முடிவே இல்லாது!! மூளை வேறு சதா ஓயாது பிதற்றிக் கொண்டு. எதில் தான் கவனம் கொள்ளுமோ?

வாழ்க்கை என்ற ஒன்றை வரையறுத்தவர்கள், அர்த்தம், பயண் இதையெல்லாம் ஏன் படைத்தனர்? கட்டுகோப்புகள் சமுதாயத்திலிருந்து எதை சாதித்து விட்டோம்?! இன்றளவும் குறைகளுடனே வாழ்கிறோம். முதல் மனிதனின் ஒரு குறையாவது நிவர்த்தி செய்யப்பட்டதா? மேலும் மேலும் குழம்பித்தான் போயிருக்கிறோம்.

ஒரு மாற்றத்தை கூட இயல்பாக எடுத்துகொள்ள முடிவதில்லை. இழப்பு என்ற ஒன்றை யார் கண்டுபிடித்தானோ? எல்லை வரையறுக்க பட்டு, எதிபார்ப்பு, நம்பிக்கை கூடிக்கொண்டு... இதுவா வாழ்க்கை?!! கால் போன போக்கில் போக வேண்டாமா? இதற்கும் எதிர்மறை - மிருகமா நீ என்று!! மனிதனாக இருந்து மட்டும் என்ன சாதித்து விட்டோம்.

சுய உணர்வு அவசியம், mastry of self முயற்சிக்கலாம் எவரும்... சித்தர்களின் வாழ்க்கை முறை நல்லது.. பின்பற்ற சிபாரிசு செய்கிறேன் மற்றபடி எதுவும் சொல்வதற்கில்லை.. முள் தைத்த செருப்பாய் நகரும்..

Saturday, November 28, 2009

தவறு எனப்படுவது

தொலைப்பு, மறத்தல் கடினமாகும் போதுதான் செய்த தவறின் சாரிரம், அதன் கடினம், மன்னிக்க முடியாத தனம் புரிதளுக்குல்லாகிறது. எப்போதுமே இருமனம் சம்மந்த பட்ட எதுவும் சரி/தவறு இவற்றுள் எல்லைபடுத்தாமல் இருக்கும் வரை இலகுவாகவே கடந்து விடுகிறது.
ஒரு மனதின் வலி, அதன் உண்மையான உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கப்படாத போது எப்படிப்பட்ட உறவும் நொடித்து தான் போகிறது... தவருக்குலான மனம் அதன் வாட்டம், தவறினால் புண்பட்ட மனம் அதன் சுணக்கம் இதில் எதன் வலியும் குறையாது ஒன்றியிருப்பின் வெளியை, அன்பை குழைத்து மறத்தல் எனும் முடிவையே முன்வைக்கிறது.
புரிதலுக்கு உள்ளாகும் எதுவும் இயல்பாகவே எடுத்துக்கொள்ளப்படும் போது, புரிதலுக்கு உட்படாத சிலவும் இயல்பாகதானே எடுதுக்கொள்ளபடவேண்டும்...
புரிந்துணர்வின் இருபக்கங்கள் மறக்கப்பட்டு - ஒருதலைபட்சமாகவே உணர்வு வெற்றிகொள்ளும் போதோ, அப்படி வெற்றிகொள்ளும் மெல்லிய இதயத்தின் உணர்வின் நியாயங்களில் உறவு தோற்கும் போதோ இழப்பு வலி மட்டுமின்றி ஏக்கத்தின் வேதனையை, குற்றவாளியின் நாழிகைகளை கொடுத்து செல்கிறது இன்னொரு மனதுக்கு... கொடுமையான ஒன்றாய் வாழ்வை அழிக்கும் ஒன்றாய் அது அமைகிறது.
நம்பிக்கைகளுள் தளைத்த உறவு கூட இப்படி பட்ட சந்தர்பங்களில் வெளிரி தளர்ந்து போவது தான் வேடிக்கை.. சந்தர்பங்களை தாண்டி நிற்கும் நம்பிக்கைக்குரிய உறவுகள் வெல்லும்.. வெல்ல வாழ்த்துக்கள்

Thursday, June 4, 2009

கரு - ப்ப் - பிருட் - டூ

கதியற்ற வாழ்வு

தன் சுமை பொறுக்காத நகர்வு

வளையங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டு

கம்பிகள் இறுக்கும் வலை

முடியாத சுழற்சி

உறங்கும் விழிகளுக்குள் புகும் துர்கனவு

அசைவற்ற தேகத்தை ஆட்கொள்ளும் மரணம்

சுற்று வழி பிரயாணம்

பிரயாணம் வரை வாழ்வு

மரணம் கேட்கும் ஓய்வு

பொய் கூறியவன் உடல் அழுகும்

பூ வாடை யாருக்கு?

ஓய்வு கொள்

மூர்சையாகாதே

மரணம் காத்திரு;

ஓயவேது ராசா