Thursday, August 4, 2011

சொல்லுவதை விட செய்து விடலாம்.. சொல்லுவதை செய்துவிடலாம்.. சொல்லும் சொல் செய்யக் கூடியதாய் இல்லாமலும் போகலாம்... சொல்லுக்கும் செயலுக்கும் இடைவேளை இருக்க கூடாது.. வாய்மை எனப்படுவது அதுதான்.. நியாயவான்கள் அப்படி இருந்து கொள்ளலாம், அன்றாடங்களுக்கு கொஞ்சம் அசௌகரியம்தான் .

சொல்லுவதை நிருத்தலாமென்றால், பேசவே ஒன்றுமில்லாமல் போய் விடும். மற்றவர்களுக்கு கோபம் வரலாம், சொந்தங்கள் வருந்தலாம், அசட்டை செய்து பிரிந்தும் போய் விடலாம். உதவிக்கு வராதவர்களின் எண்ணங்களுக்கு மரியாதை தர மனம் இல்லை. பேச வேண்டும் என்பதர்க்காகவேனும் இன்னும் சொல்லலாம், செய்ய கூடியதாய் எதுவும் கிடைக்காமலா போய்விடும்?

செய்து முடித்துவிட்டால் சிலகாகித்துக்கொல்லலாம், செருக்கேறி போய் மயிர் வளர்துக்கொல்ள்ளலாம். மற்றவர்கள் கேட்க பீத்திக்கொள்ளலாம். எத்தனை நாளைக்கு? மறுபடியும் சொல்ல கேட்பார்கள்.. மௌன விரதிகள் ஊர் ஒன்று உள்ளதாம், போய் சேர வேண்டும்.

எழுத்து நம்பிக்கை தரும், சொல் சோர்வை தருகிறது.. பாரதி பாடி வைத்தான், பாட்டு உற்சாகம்.. பாடகன் உர்ச்சவன்.. சிவன் ஆடினான், பாடல் இருந்ததா தெரியவில்லை.. சிந்தனை போல் ஒன்றுமில்லை.. சொல்லும் எழுத்தும் இல்லாமல் போகிலும் சிந்தனை வரும். சிந்தனை போல் செயல் என்றால் சொல்லிக்கொள்ள தேவை இல்லை. சொல்ல கேட்டாலும் சொல்லலாம்: சித்தம் போக்கு சிவன் போக்கு என்று!

No comments:

Post a Comment