Sunday, February 22, 2009

கிருஷ்ணப் பருந்து - ஓர் தரிசனம்

ஆ. மாதவனின் கிருஷ்ணப் பருந்து படித்து முடித்தேன்.
நாவலில் வாழ்ந்துவிட்டு போகும் கதாபாத்திரம் உண்டு பண்ணும் தாக்கம் வாசகனின் நெஞ்ஜோட்டத்தில் அமைந்து விட்டால் அது தான் அதன் வெற்றி. ஒரு பக்கத்தில் ஒரு முறயோ அல்லது வரிகளின் தோறும் இணைத்து பர்ர்க்க முடிகிற வகையில் எதார்த்தமான மனிதர்களும், எதார்த்தமில்லாத நினைவுகளுமாய் களம் காண்கிறது. எளிதாக சொல்லியிருந்தால் இதன் கணம் குறைந்து தான் போயிருக்கும். குருசாமி சரியும் நேரம் மனிதம் அதன் இயல்பில் நிமிர்ந்து சிரிக்கிறது. முகமூடிகளின் ஒப்பனையாய் தாடியும், அந்த தாடிக்குள் மறையும் காம ரகஸ்யங்களும் மென்மையாய் மனதின் இருண்ட ஸ்வாரஸ்யங்களுக்கு இட்டு செல்கிறது. முழுமையான உளவியல் ரீதியில் சம்பவங்களை நியாயப்படுத்தி இருப்பது வாசகர்களின் ஈகோ' வை சமாதானப்படுத்தவே என்று தோன்றுகிறது. வயது முதிர்ந்த காமம் வலிய தன்னுணர்வால் வெல்லப்படுகிறது. கிருஷ்ணப் பருந்தின் தவம் நிகர்சனமாகும் தருணம் அது. 'ஸாமியப்போ' இறங்கிய பொழுதும் நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.

Wednesday, February 18, 2009

தீட்சை

இரட்சகனின் வாள் மின்னுகிறது

குருதியற்ற உடலை கிழிக்க
பிதுங்கிக் கொண்டிருக்கிறது பிசின்

ஆசிர்வதிக்கப் பட்ட நீரால் கழுவப்படட்டும் என்கிறான்

நீரை உட்கொண்டு கசிகிறது இரத்தம்

பீதியுற்றவனாய் வெட்டி எறிகிறான்

பிறகும்

தீட்சைப் பெற்று

ஒவ்வொரு துண்டமும் முளைத்தெழுகிறது

Sunday, February 8, 2009


கடைசி வர்ண குழைவில்
சிக்கியது உனது இதழின் ஒளி
நிறைய எறும்புகள் மொய்தவுடன் தான்
தெரிந்து கொண்டேன்
என் ரத்தத்தில் கனிந்திருந்த
உன் ருசியை

Friday, February 6, 2009

Blogging Quick Tips

watch for the you tube... unique way of presentation (I believe)

நிழல்

எதை விடவும் இனிதாகிறது உன் அன்பு

எட்சனமும் நிறைந்திருக்கிறது உன் நெருக்கம்

உயிரில் கலந்தே போனது உன் ஸ்பரிசம்

நெடு விரல் வருட
கற்றை குழலில் ஒன்றிரண்டாவது
சிக்குகள் கிட்டாத போது மட்டும்
ஊடல் கொள்வோம்

விரல்கல் உண்டு

மடி சாய்வாய்

என் மகளே

Thursday, February 5, 2009

ரில்கே ஒரு அறிமுகம்

ரில்கே (ரைனேர் மரியா ரில்கே)
நெஞ்சத்தின் கனலலிலே துவளும் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தவன்.
காப்கா அறிந்த/ரசித்த 'வர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கவிஞன், எனக்கு ரில்கேவின் அறிமுகம் எதேர்ச்சையாக நிகழ்ந்தது, அதிக சிரமம் இன்றி கண்டுகொண்டது அத்ரிஷ்டம் தான் மொழி பெயர்ப்புக்கு கடினமான கவிதைகள் - நம்மவர்கள் புத்தகம் போட்டுவிட்டனர், சென்னை கண்காட்சியில் பார்க்க முடிந்தது, வியப்பாக இருந்த்து. அடுத்த வருடம் பதிப்பகத்திற்கு ஒன்றாக புத்தகம் வெளிவந்தாலும் வியப்பதற்கில்லை.

என்னால் மறக்க முடியாத ரில்கேயின் ஒரு கவிதை -பலங் ஜாய்

http://www.poemhunter.com/poem/blank-joy/ என்ற தளத்தில் அவரது கவிதைகளின் தொகுப்பு காணலாம்...