Monday, April 27, 2009


எதையும் செய்வதற்கு முன் யோசிப்பதில்லை. யோசிக்க நேரமேது... யோசித்து நடந்திருந்தால் யோசிக்க தோணலாம், பிறகு என்ன யோசனை வேண்டியிருக்கு? முன்கூட்டியே அனுமாநித்திடதான் வேண்டியுள்ளது, யோசனைகள் தேவையில்லை என்பதையும் யோசனைப்படி நடந்துகொள்ள ஒத்துவராத மனநிலையையும்.

இப்போது கூட யோசிக்கவில்லை, நம்பியின் வாடை குமட்டிஎடுக்கிறது.....


காதலி கோபித்துக்கொள்கிறாள், நண்பர்கள் சிரிக்கிறார்கள், கவிதையோ கதையோ வருவதற்கில்லை...


தூக்கம் வருகிறது, காமத்திற்கு குறைவில்லை யோசித்தா வருகிறது இதெல்லாம்...


வாழ்கை சென்றுகொண்டுதான் இருக்கிறது, யோசிக்க கூடிய மாதிரி அமைவதில்லை எதுவும். புத்தகம் எடுத்தால் புரண்டு படுக்கிறது மனசு, கவிதையை இனிமேலும் கொலை செய்ய வேண்டாமென்று மூடி விடுகிறேன். யோசித்திருந்தால் நடந்திருக்காதுதான் பலவும்... நடந்திராவிட்டால் சுவாரஸ்யமேது.... குருடனுக்குதானே கற்பனைகள் அதிகம்... நடக்கும் பட்சத்தில் எல்லாம் நிகழ்வே... நல்லதெது? தெரிந்தால் ஞானி தான்...


புரண்டு படுக்க தோனுகையில், படுக்கை வெளி தாண்டி வீழ்கையில் தான் கனவு கலைகிறது... தோன்றி கனவு களைவதில் துக்கமாகத்தான் உள்ளது. நாயின் கனவை பற்றிதான் யோசித்து வருகிறேன்...



Friday, April 17, 2009

ஒளிந்திருந்து பார்க்கையில்
என்னுடனான ஊடலுக்கு ஒத்திகையில் ஈடுபட்டிருந்தாய்

பின்னிருந்து உன் இடை அணைத்த போது
நாணம் பூத்து மார்போடு ஒட்டிகொண்டாய்

அன்றைய இரவு அப்சரஸ் ஒன்று
தயங்கி நம் அறையில் நுழைந்தது

உன் இதழ்களை புண்ணாக்கியது
நான் இல்லை என்பதை நீ நம்பவேஇல்லை