Wednesday, December 15, 2010

உலகில் எது மிகவும் சுவாரஸ்யமானது?
பொய் உரைக்கும் குழந்தையின் முகபாவம்!
பொய் சொல்ல எப்போது கற்றுகொள்கிறோம்? முதல் பொய் என்னவென்று யாருக்காவது ஞாபகம் இருக்குமா?
சுவாரஸ்யமான பொய்களில் ஒன்று - பொய்யாக கோபப்படுவது.. அதுவும் காதலியின் பொய் கோபம் தனித்துவமானது.. அந்த கோபத்தினை உண்மை போல பாவித்து பாருங்கள், அதன் இன்பமே அலாதி! பொய் கோபத்தை துறக்கும் நளினம் அது பெண்களுக்கு மட்டுமே வாய்க்கும். எதிர் தரப்புக்கு தெரியாத படி நூலிழையில் கோபம் கறைந்து பேச ஆரம்பிப்பார்கள், உங்களுக்கு சாத்தியமா என்று தெரியவில்லை நான் முயற்சித்து தோற்றதுதான் மிச்சம்!

எப்படி கண்டுகொள்ள என்று கேட்பவர்களுக்கு...
1. காதலியின் பொய் கோபம் நீங்கள் எதிபாராத நிமிடத்தில் ஏற்படும்
2. வழக்கமான சுபாவங்களில் இருந்து பொய் கோபப்படுகையில் வேறுபட்டு காணப்படுவர்
எடு-அதிகமாக பேசும் காதலி பேசுவதையே தவிர்க்கலாம், பார்க்க வருவதை விரும்பும் ஒருவர் வெளி வருவதை நிறுத்தி கொள்ளலாம்
3. எப்பொழுதை காட்டிலும் சமாதானத்திற்கு அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளுதல்

என்ன செய்வதென்று அறியாத பேதை ஆண்களுக்கு...
1. முடிந்த வரை சமாதானப்படுதுங்கள்
2. கோபத்தை கட்டுபடுத்த சினிமாவில் சொல்வது போல் 1 முதல் 10 வரை எண்ணுங்கள்
3. முடிந்த வரை கோபத்தினை ரசிப்பதாக நடியுங்கள்
4. கவிதை தெரிந்தால் ஒன்றிரண்டை எடுத்து விடலாம், இல்லை எனில் தொட்டு பேசுங்கள்
5. பெயர் சொல்லி மட்டுமே அழையுங்கள் - செல்ல பெயர்களை தவிர்த்திடுங்கள்

திரும்பவும் சொல்லிகொள்கிறேன், உங்கள் மழலையில் சொன்ன பொய்களை மற்றவர்கள் ரசித்திருக்கலாம். உங்கள் மழலை பொய்களை பிரதிபலிக்கும் காதலியின் செல்ல கோபங்களை ரசிக்க மறக்காதீர்கள்!


1 comment:

  1. வரிகளில் அனுபவமும்,
    ரசனையின் முதிர்ச்சியும் தெரிகிறது..
    உன் காதலி உன்னை ஆளாக்குகிறாள்...
    வாழ்த்துகள்..!

    ReplyDelete